நான்கு வாகங்களை உட்படுத்திய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்

ஜன.15-

PLUS வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த நான்கு வாகங்களை உட்படுத்திய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். மண்ணையும் பூக்களையும் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புக் கம்பியை மோதி விபத்துக்குள்ளானது. பின்புறத்தில் வந்த இரண்டு கார்கள் லாரியை தவிர்க்க முடியாமல் மோதியதால் இந்த விபத்து மேலும் அதிகரித்தது. லாரி ஓட்டுநரும் அவர் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒரு கார் பயணி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற கார் பயணிகள் படுகாயமடைந்தாக Rembau மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Shaik Abd Kadar Shaik Mohamed தெரிவித்தார்.

இந்த விபத்து அதிகாலை 5.50 மணியளவில் 226.5 வது கிலோ மீட்டரில் வடக்கு திசையை நோக்கிய பாதியில் நிகழ்ந்துள்ளது. காவல் துறையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS