வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

ஜன.15-

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றிரவு 1,092 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 855 ஆக குறைந்துள்ளது. குளுவாங், பொந்தியான், ஜோகூர் பாரு கோத்தா திங்கி ஆகிய பகுதிகளில் 10 தற்காலிக நிவாரண மையங்களில 249 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குளுவாங்கில் அதிகபட்சமாக 415 பேரும், பொந்தியானில் 359 பேரும், ஜோகூர் பாருவில் 53 பேரும், கோத்தா திங்கியில் 28 பேரும் உள்ளனர்.

ஜோகூர் தவிர, பகாங், திரங்கானு, பேரா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பகாங்கில் 186 பேரும், திரங்கானுவில் 16 பேரும், பேராவில் 13 பேரும், சரவாக்கில் 20 பேரும் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் வெள்ள நிலைமையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS