ஜன.15-
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் MBPJ ஏற்பாடு செய்த Lifelong Learning IT (வ் Lifelong Learning IT Softskill 2024. திட்டத்தின் மூலம், 110 B40 குடும்பங்களையும் பழங்குடி இனத்தையும் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணினித் திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக, Microsoft Office Word, Excel , PowerPoint மென்பொருட்களைப் பயன்படுத்துவது, கணினி பழுதுநீக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இது மாணவர்களுக்கு பள்ளி தேவைக்கும் எதிர்கால தேவைகளுக்கும் உதவும் ஒரு முயற்சியாகும் என்று Petaling Jaya Datuk Bandar, Datuk Mohamad Zahri Samingon தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளி , இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் வகையில், இரண்டு இடைநிலைப் பள்ளிகளுக்கு MBPJ கணினிகளை நன்கொடையாக வழங்கியது. இந்த்த திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஒன்றான தரமான கல்வியை நோக்கமாகக் கொண்டது என Mohamad Zahri Samingon குறிப்பிட்டார்.