39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்

ஜன.15-

கோலாலம்பூரில் உள்ள Jalan Yap Kwan Seng பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் 39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். காலை 7.39 மணிக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர் 29 வயது என்றும், அதே குடியிருப்பில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

WATCH OUR LATEST NEWS