ஜன.15-
இணையம் மூலம் இல்லாத வாகனப் பதிவு எண்களை விற்பனை செய்யும் மோசடி கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து, ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக பேரா மாநில காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Deputi Komisioner Zulkafli Sariaat தெரிவித்தார். இந்த கும்பல் பல மாநிலங்களில் மக்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டது. இவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் தலைவர் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களைத் தேடுபவர்கள், வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் போலி பதிவு எண்களை தயாரிப்பவர்கள் ஆகியோரும் அடங்குவர். இந்த கும்பல் 71 ஆயிரத்து 400 ரிங்கிட் மதிப்புள்ள மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.