சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜன.15-

16 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பில் இராணுவ தளபதிகளையும் உயர்மட்ட அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியான செய்தியை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கும், தளபதிகளின் பணிநீக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவை நாட்டின் பாதுகாப்பிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொய்யான செய்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது. அரசாங்கம் Weststar Aviation Sdn Bhd நிறுவனத்துடன் அரசு பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர் குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS