ஒரு ஆசிரியர் தனது வருத்தத்தை டிக்டோக் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்

ஜன.15-

150 ரிங்கிட் பள்ளி உதவித் தொகை பணம் தங்கள் குழந்தைகளுக்கு போதுமானதாக இல்லை என்று பெற்றோர்கள் ஆசிரியர்களை திட்டுவதால் ஒரு ஆசிரியர் தனது வருத்தத்தை டிக்டோக் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும், இதனால் பெற்றோர்கள் ஆசிரியர்களை தவறாக புரிந்துகொண்டு திட்டியதாகவும் @mdflzh என்ற கணக்கின் வாயிலாக ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். உதவித் தொகை மாணவர்களுக்கானது என்றும், பெற்றோர்கள் அதனை மளிகைப் பொருட்கள் வாங்க பயன்படுத்த நினைத்து ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உதவித் தொகை என்பது பள்ளி உபகரணங்களுக்காகவும் இதர கல்வித் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அதனை வேறு தேவைகளுக்கு குறிப்பாக குழந்தைகள் செலவு செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வசதி படைத்த பெற்றோர்கள் இது குறித்து கவலைப்படுவதில்லை என்றும், வசதி இல்லாத பெற்றோர்களுக்கு இது முக்கியமான உதவி என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS