பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஜன.15-

Hejira Travel & Tours Holding Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mohd Syahril Alias, 300க்கும் மேற்பட்ட உம்ரா யாத்ரீகர்களை புனித பூமிக்கு அழைத்துச் செல்லத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அனைத்துலக சமூக மனிதநேய அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு முடித்தவுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் உம்ரா பயணத்தை திடீரென ஒத்திவைத்ததால் யாத்ரீகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கிய செய்தியாளர் சந்திப்பு, நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத யாத்ரீகர்களுடன் வாக்குவாதமாக மாறியது. சவுதி அரேபியாவில் தங்கும் விடுதி இரத்து செய்யப்பட்டதால் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS