ஜன.15-
ECRL எனப்படும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் மாரான் முதல் கோத்தா பாரு வரையிலான முக்கிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் திட்டமிட்டதை விட இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது. பருவமழை, கிளாந்தான் வெள்ளம் போன்ற தடைகள் இருந்தபோதிலும், இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதனால், கிளாந்தான் பகுதியில் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் Malaysia Rail Link Sdn Bhd இன் தலைமைச் செயல்முறை அதிகாரி Datuk Seri Darwis Abdul Razak .
ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் 77.39 விழுக்காட்டை எட்டியுள்ளது. கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான பாதை டிசம்பர் 2026 இல் முடிவடைந்து ஜனவரி 2027 இல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Darwis குறிப்பிட்டார். சீனாவின் அதிநவீன தொழில்நுட்பமும் ECRL குழுவின் ஒத்துழைப்பும் இந்த விரைவான முன்னேற்றத்திற்கு காரணமாகும். சிலாங்கூரை நோக்கிய கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.