ஜன.15-
சிலாங்கூர் மாநில அரசு, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சுக்மா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் எங்கு நடத்தப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஷா ஆலம் ஸ்டேடியம் கட்டுமானத்தில் இருப்பதால், மெர்டேகா ஸ்டேடியம் , புக்கிட் ஜலில் தேசிய ஸ்டேடியம் உள்ளிட்ட பல மாற்று இடங்கள் பரிசீலனையில் உள்ளன. ஸ்டேடியம் கட்டுமானம் 2027 வரை நிறைவடையாது என்பதால், தரத்தை உறுதி செய்வதற்காக அவசரப்படாமல் கவனமாக செயல்படுவதாக சிலாங்கூர் மாநில முதலமைச்சர் Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகள் எந்தெந்த இடங்களில் நடத்தப்படும் என்பது குறித்தும், பிற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வசதிகளை பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. சுக்மா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தொடக்க விழாவும் நிறைவு விழாவும் எங்கு நடத்தப்படும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். வழக்கமான போட்டிகளுக்கு தற்போதுள்ள ஸ்டேடியங்களே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.