கோலாலம்பூர், ஜன.16-
சிறார்களை பயன்படுத்தி, அவர்களை பிச்சை எடுக்க வைத்து, நாள் ஒன்றுக்கு சராசரி மூவாயிரம் வெள்ளி வரை சம்பாதித்து வந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த கும்பலின் சுரண்டல் செயல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிலாங்கூர் கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் ஆகியவற்றை தளமாக கொண்டு, சிறார்களை பிச்சை எடுக்க வைத்த அந்த ஏமன் கும்பல், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மனிதக்கடத்தல் மற்றும் மனித வர்த்தக தடுப்புப்பிரிவின் தலைமை உதவி இயக்குநர் ஏ.எஸ்.பி. சோபியான் சந்தோங் தெரிவித்தார்.
இக்கும்பல் பிடிபட்டது மூலம் 21 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரு பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த எட்டுப்பேரில் ஒருவன், மூளையாக இருந்து செயல்பட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்தள்ளது என்று அவர் விளக்கினார்.