கோலாலம்பூர், ஜன.16-
மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் மாது ஒருவரும், பதின்ம வயதுடைய பெண்ணும் கடும் காயங்களுக்கு ஆ ளாகினர்.
இச்சம்பவம் இன்று காலை 10.44 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் புடு, புக்கிட்ட பிந்தாங், சுவிஸ் கார்டன் ஹோட்டல் அருகில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் காயங்களுக்கு ஆளாகிய 39 வயது மாதுவும், 15 வயது பெண்ணும் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோலாலம்பூர், புடுராயா பேருந்து நிலையத்திற்கும், பழைய புடு சிறைச்சாலைக்கும் இடையியில் தனியார் மருத்துவமனை முன்புறம் உள்ள பகுதியில் நிகழ்ந்ததால் சாலையின் குறுக்கே கிடக்கும் மரத்தினால் போக்குவரத்து நிலைக்குத்தியது.
ஜாலான் புடுவிலிருந்து ஜாலான் ஹாங் துவா, ஜாலான் டேவான் பஹாசா மற்றும் ஜாலான் மஹாராஜா லீலாவை இணைக்கும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாலையில் கிடக்கும் மரத்தை அகற்றும் துப்புரவுப்பணியை கோலாலம்பூர் மாநகர் மன்றம் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.