சுபாங்ஜெயா, ஜன. 17-
சுபாங் ஜெயா, புத்ரா ஹையிட் பகுதியில் கேபள்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த மூன்று ஆடவர்களையும் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்துப் போலீசார் கையும் களவுமாக பிடித்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த இரண்டு கார்களை போலீசார் பரிசோதனை செய்த போது கேபல்கள் வெட்டப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.