கெமாமான், ஜன. 17-
திரெங்கானு, கெமாமான், பாடாங் அஸ்தாக்கா சுக்காய் உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவர், கும்பல் ஒன்றினால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி, இன்று வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அது தொடர்பாக அளிக்கப்பட்ட போலீஸ் புகார் அடிப்படையில் சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தேடி வருவதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட் ஜப்பார் தெரிவித்தார்.