கோலாலம்பூர், ஜன.17-
ஐந்து நாட்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பேரங்காடியின் கழிப்பறை தொட்டியில் வீசி, பிரவசத்தை மறைக்க முயற்சி செய்ததாக ஜப்பானிய பெண் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
36 வயது நோடா ஜுன்கா என்ற அந்தப் பெண் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர், செராஸில் உள்ள பிரபல பேரங்காடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 318 பிரிவின் கீழ் அந்த ஜப்பானியப்பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்