கோலாலம்பூர், ஜன. 17-
நாடு மற்றும் கட்சி அரசியலில் லிம் கிட் சியாங் குடும்பத்தினரின் சகாப்தம் இனி தேவைப்படாவிட்டால் பதவி விலகுவேன் என்று துணை நிதி அமைச்சரும் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் புதல்வியுமான லிம் ஹுய் யிங் சூளுரைத்துள்ளார்.
தாம் துணை நிதி அமைச்சராக பொறுப்பேற்ற போதிலும் இன்னமும் லிம் கிட் சியாங்கின் புதல்வி, லிம் குவான் எங்கின் சகோதரி என்ற அடைமொழியுடன் தாம் அங்கீகரிக்கப்பட்டு வருவதை லிம் ஹுய் யிங் ஒப்புக்கொண்டார்.
தமது தந்தை லிம் கிட் சியாங் மற்றும் சகோதரன் லிம் குவான் எங்கின் நிழலில் தாம் இருப்பது போல் உணரப்பட்டாலும் லிம் கிட் சியாங் குடும்பத்தினரின் சகாப்தம் இனி தேவையில்லை என்று கருதும் நிலை ஏற்படுமானால் பதவி துறப்பதற்கு தாம் திடமாக இருப்பதாக லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.