ஜன. 19-
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், கோயில் நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, 2025 தைப்பூசத் திருவிழாவிற்காக அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த முக்கியமான திருவிழாவிற்கு கோயிலைத் தயார் செய்யும் நோக்கில் இந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இஃது இந்து சமூகத்தின் ஒற்றுமையும் = பக்தியின் வெளிப்பாடாகவும் அமைந்தது என அதன் தலைவர் RSN Rayer குறிப்பிட்டார்.
இந்தச் சுத்தம் செய்யும் பணி, ஒற்றுமை உணர்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக புனித இடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது என்றார். தைப்பூசத் திருவிழா என்பது இந்துக்களுக்கு நம்பிக்கை, நன்றியுணர்வின் அடையாளமாகும். இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் Senator Dr RA Lingeswaran தனது நன்றியைத் தெரிவித்தார்.