கல்விக்கான பெற்றோர் செயல் குழு வலியுறுத்தியுள்ளது

ஜன. 19-

இடைநிலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் முன், கல்வி அமைச்சு, படிப்பை முடிக்கும் மாணவர்களின் யதார்த்தமான இலக்கு விழுக்காட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று PAGE எனப்படும் கல்விக்கான பெற்றோர் செயல் குழு வலியுறுத்தியுள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் ஏற்கனவே இடைநிற்றல் பிரச்சினை இருக்கும் நிலையில், இலக்கின்றி கொள்கையை அறிமுகப்படுத்துவது பயனளிக்காது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆரம்பப் பள்ளிகளில் இடைநிற்றலுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வு கண்ட பிறகே இடைநிலைக் கல்வியை கட்டாயமாக்குவது பயனுள்ளதாக இருக்கும் என்று PAGE இன் தலைவர் Noor Azimah Abdul Rahim தெரிவித்தார். தேர்வுகளை இரத்து செய்வது மேலும் சிக்கலை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப நிலைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், மலேசிய கல்விச் சான்றிதழ் – SPM மாணவர்களின் இடைநிற்றல் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று அக்குழு வலியுறுத்தியுள்ளது. இடைநிலைக் கல்வி கட்டாயமாக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று UIAM இன் கல்வியாளர் Ainol Madziah Zubairi கருத்து தெரிவித்துள்ளார். முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில், மாணவர்களின் இடைநிற்றலுக்கு பொருளாதார காரணிகளே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. எனவே, நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

WATCH OUR LATEST NEWS