சமூக நல மையங்களை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு, நாடு முழுவதும் உள்ள KRT எனப்படும் 300 Kawasan Rukun Tetangga சமூக நல மையங்களை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் 8529 மையங்கள் உள்ள நிலையில், பொருளாதார திட்டங்களையும் தன்னார்வ ரோந்துப் பணிகள் போன்ற திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தும் 300 மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக JPNIN எனப்படும் தேசிய ஒற்றுமை, தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Che Roslan Che Daud தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள TABIKA , TASKA Perpaduan எனப்படும் குழந்தைகள் காப்பகங்களின் வசதிகளை மேம்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ள சேதங்களை சரிசெய்யவும் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிகள் மார்ச் மாதத்திற்கு பிறகு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS