‘ham & cheese sandwich’ விற்பனை தொடர்பான விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம்

ஜன. 19-

மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள KK Mart கடையில் ஹலால் தகுதி சர்ச்சைக்குரிய ‘ham & cheese sandwich’ விற்பனை தொடர்பான விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று துணைப் பிரதமர் Zahid Hamidi கேட்டுக்கொண்டுள்ளார். விற்பனையாளர் தரப்பு ஏற்கனவே பொருட்களை திரும்பப் மீட்டுக் கொண்டுள்ளதால், இந்த பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்றும், இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் Jakim, உள்நாட்டு வர்த்தகம் , வாழ்க்கைச் செலவின அமைச்சு, காவல்துறை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அம்னோ இளைஞர் தலைவர் Dr Akmal Saleh, கடையில் ‘அல்லாஹ்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காலுறை விற்பனை தொடர்பான பழைய பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். ஆனால், அசீச, ஜசெக தலைவர்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று அக்மலுக்கு அறிவுறுத்தினர். ham என்பது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மட்டுமே குறிக்கும் என்றும், நாட்டில் ‘turkey ham’ , ‘chicken ham’ போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன என்றும் ஜசெக துணைத் தலைவர் Nga Kor Ming கூறினார்.

WATCH OUR LATEST NEWS