ஜன. 19-
லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தொடர்பு பல்லூடக அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Fahmi Fadzil கலந்து கொண்டார். இவ்விழா பந்தாய் டாலாமில் உள்ள IWK Eco Park இல் நடைபெற்றது. பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியன இவ்விழாவில் இடம் பெற்றன. முக்கிய அங்கமாக பாரம்பரிய முறையில் 50 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் போட்டியும் இடம்பெற்றது.
பொங்கல் விழா போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அமைவதால், சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில், மக்களுடன் நேரடித் தொடர்புகொள்ளவும், அவர்களின் நம்பிக்கையைப் பெறவும் உதவுவதாக Fahmi Fadzil குறிப்பிட்டார்.
ஒரே நாளில் பல்லின மக்களின் வெவ்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெறும் மகிழ்வு கொண்டதாக அவர் கூறினார். இந்தப் பண்முகத் தன்மையே மலேசியாவின் தனித்தன்மை இளையத் தலைமுறை நமது பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.