ஜன. 19-
மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவ அரசாங்கம் தேர்தலை நடத்துவதை விட பேச்சுவார்த்தையையும் போர் நிறுத்தத்திற்கு முன்னுரிமையையும் அளிக்க வேண்டும் என்று ஆசியான் வலியுறுத்தியுள்ளது. இராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து மியன்மார் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. ஆசியான் தலைவர்கள் மாந்தநேய உதவிகளை அனுமதிக்கவும் பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தலை நடத்துவதை விட போர் நிறுத்தம் தான் தற்போது முக்கியம் என்று ஆசியான் மியன்மாருக்கு தெரிவிப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் Mohamad Hasan குறிப்பிட்டார்.
மேலும், மியன்மருக்கான ஆசியான் தூதராக Othman Hasan நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியான் – சீனா இடையே தென் சீனக் கடல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த மலேசியா முயற்சித்து வருகிறது. அமெரிக்கா – சீனா இடையேயான மோதல் அதிகரித்தால் ஏற்படும் வட்டாரத் தாக்கங்கள் குறித்து ஆசியான் கவலை தெரிவித்துள்ளதாக Mohamad Hasan மேலும் கூறினார்.