ஜன. 20-
கடந்த சனிக்கிழமை, எதிர் திசையில் வாகனத்தை செலுத்தி, மூன்று வாகனங்களை மோதித் தள்ளிய வாகனமேட்டியை போலீசார் கைது செய்தனர்.
பட்டர்வொர்த், Jalan Chain Ferry-யில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் மாலை 4 மணியளவில் 28 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி, கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அந்த நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக அந்த நபர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அனுவார் குறிப்பிட்டார்.