மலாக்கா, ஜன. 20-
பகுதி நேர கலைஞர் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் ஒப்பனை கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய அந்த ஒப்பனை கலைஞர் இன்று காலையில் மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
18 வயது பகுதி நேர கலைஞருக்கு முகம் மற்றும் சிகை அலங்கார இலவச சேவையை வழங்குவதாக கூறி, அந்த இளம் கலைஞரை மானபங்கம் செய்ததாக மாஜிஸ்திரேட் ஷர்டா ஷின்கா முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் பாங்கியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வரும் அந்த பகுதி நேர கலைஞரை மலாக்கா, தாமான் தாசேக் உத்தாமாவில் உள்ள தனது ஒப்பணை நிலையத்திற்கு வரவழைத்து, மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.