ஜோகூர்பாரு, ஜன.20-
தாய்லாந்துப் பிரஜை என்று நம்பப்படும் பெண் ஒருவர், பேரங்காடியின் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.28 மணியளவில் பொது மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து ஜோகூர்பாருவில் உள்ள பேரங்காடி ஒன்றின் கழிப்பறையில் அந்த அந்நியப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் மரணத்தை போலீசார், திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளனர். சவப்பரிசோனைக்காக அந்தப் பெண்ணின் சடலம் சுல்தானா அமினா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.