மாணவன் துன்புறுத்தப்பட்டதாக போலீசில் புகார்

ஈப்போ, ஜன.20-


தனது மகன் ஆசிரியர் ஒருவரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாக 42 வயது தனித்து வாழும் மாதுவிடமிருந்து போலீசார் புகார் பெற்று இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அபாங் ஸைனால் அபிடின் அகமட் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாது, கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி மதியம் 1.15 மணியளவில் புகார் அளித்து இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவனுக்கு சிராய்ப்பு காயம் காணப்பட்டுள்ளது. ஆசிரியர் தாக்கியதால்தான் அந்த காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாது தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்விவகாரம் குற்றவியல் சட்டம் 322 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஸைனால் அபிடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS