கொடிகள் தொடர்புடைய முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் உள்ளன

கோலாலம்பூர், ஜன.20-

மலேசியாவில் வெளிநாட்டுக்கொடிகள் உட்பட தேசிய சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதை முறைப்படுத்தும் சட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்று சட்ட நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

1949 ஆம் ஆண்டு சட்டம், 1977 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் முதலியவையே அந்த சட்டங்களாகும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளமான போம்காவின் சட்ட ஆலோசகர் டத்தோ இந்திராணி துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய சின்னங்கள், கொடிகள் மற்றும் பதாகைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சட்டங்கள் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

எனவே தேசிய கொடிகள் தொடர்புடைய புதிய சட்டங்கள் அவசியமில்லை என்று அந்த சட்ட நிபுணர் வாதிடுகிறார்.

WATCH OUR LATEST NEWS