
நடிகை தேவயானி தனது ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்கம் மற்றும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இப்படத்திற்கு இசை இளையராஜா, ஒளிப்பதிவு ராஜன் மிரியாலா, படத்தொகுப்பு பி.லெனின். இக்குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என். முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த 20 நிமிடப் படம், தாயை இழந்து, வேறொரு நகரத்தில் பணிபுரியும் தந்தையுடன் வாழும் இளம்பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கிறது. இன்றையச் சூழ்நிலைகளில் குழந்தைகளின் உணர்ச்சிகளையும் சவால்களையும் கதை எடுத்துக்காட்டுகிறது. 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கைக்குட்டை ராணி’ சிறந்த குழந்தைகளுக்கான குறும்பட விருதை வென்றுள்ளது.
இந்த சாதனை குறித்து தேவயானி தனது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தினார். மேலும் இந்த படத்தை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.