சொக்சோவை ஏமாற்றிய வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜன.21-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்படாத பயிற்சிக்காக, சமூக  பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவிடம் 8 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளியை கோரி, மோசடிப் புரிந்ததாக வர்த்தகர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.  

பி. சத்தியசீலன் என்ற 52 வயதுடைய அந்த நபருக்கு எதிராக மொத்தம் 17 மோசடிக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. 

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதிக்கும் 2021 ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் தேதிக்கும்  இடைப்பட்ட காலத்தில் மூன்று பயிற்சித்திட்டங்கள் நடத்தப்படாத நிலையில் அதில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதைப் போல போலியான ஆவணங்களைத் தயாரித்து., இரண்டு சொக்சோ அதிகாரிகளை நம்பவைத்து ஏமாற்றியதாக சத்தியசீலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சத்தியசீலனின் நிறுவனமான Global Education Network Sdn. Bhd. நிறுவனத்திற்கு எட்டு லட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட்டை பெறும் அளவிற்கு மிகப்பெரிய மோசடியில்  அந்நபர்  ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்  தெரிவிக்கப்பட்டது. 

WATCH OUR LATEST NEWS