பெட்டாலிங் ஜெயா, ஜன.23-
தனது புகைப்படத்தை தணிக்கை செய்து, ஆடையின்றி நிர்வாணக் கோலமாக, சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெண் ஒருவர் அளித்துள்ளார்.
இப்புகாரைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிசாம் ஜாபார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை மாலை 4.13 மணியளவில் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து தாங்கள் புகாரை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் திறக்கப்பட்டுள்ள ஒரு செயலியின் மூலம் அந்த ஆபாசப்படம் ஒன்று தலா 18 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 292பிரிவின் கீழ் இவ்விவகாரத்தை தாங்கள் புலன் விசாரணை செய்து வருவதாக ஏசிபி ஷாருல்நிசாம் குறிப்பிட்டுள்ளார்.