ஜார்ஜ்டவுன், ஜன.23-
பினாங்கு, ஜார்ஜ்டவுனை தளமாக கொண்ட கிச்சாப் மற்றும் மிளகாய் Sos- யை தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இரு தொழிற்சாலைகளிலும் கிச்சாப் மற்றும் மிளகாய் சோஸ் பதப்படுத்தப்படும் இடத்தில் எலிகளின் எச்சம் குவிந்து கிடந்தைத் தொடர்ந்து அந்த இரு தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடும்படி பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்ட சுகாதார இலாகா உத்தரவிட்டது.
இவ்விரு தொழிற்சாலைகளும் எலிகளின் எச்சம் காரணமாக ஏற்கனவே ஏழு முறை மூடப்பட்டு, திறக்கப்பட்டதாக சுகாதார இலாகாவின் பதிவில் தெரியவந்துள்ளது.
முதல் சோதனை ஜாலான் பட்டாணியில் மேற்கொள்ளப்பபட்டது. இரண்டாவது சோதனை Jalan C.Y. Choy- யில் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதார இலாகா கூறியது.
இவ்விரு தொழிற்சாலைகளும் 120 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும்.