நாட்டின் முன்னணி ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர்களான ஆரோன் சியாவும் சோ வுய் யிக்கும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இஸ்தோராவில் நடைபெற்ற இரண்டாம் சுற்றில் அவ்விருவரும் தைவான் ஜோடியை இரு செட்களில் மிக எளிதாகத் தோற்கடித்தனர்.
இவ்வேளையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் வெண்கலப் பதக்க வெற்ற்றியாளர்களான அவர்களை மலேசிய பூப்பந்து சங்கத்தின் பயிற்றுனர் பிரிவு இயக்குனர் ரெக்சி மைனாக்கி பாராட்டியுள்ளார். ஆரோன் சியா-சோ வுய் யிக் இணை நாளை அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரிய ஜோடியான காங் மின் ஹியுக்கையும் கிம் வொன் ஹோவையும் சந்திக்கவுள்ளனர்.
இதனிடையே நாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவின் சென் தங் ஜீயும் தோ யீ வெய்யும் காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர். இரண்டாம் சுற்றில் அவர்கள் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தினர்.