இயக்குநர் சுந்தர் சி, பிரசாந்த், வடிவேலு கூட்டணியில் உருவாகி கடந்த 2003ம் ஆண்டு வெளியான வின்னர் படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன் 2 மற்றும் கலகலப்பு 3 படங்களை இயக்க உள்ள சுந்தர் சி அடுத்ததாக வின்னர் 2 படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சுந்தர் சி, பிரசாந்த் மற்றும் வடிவேலு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதுவும் படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போதே ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரசாந்த், இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து கடந்த 2003ம் ஆண்டில் வின்னர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிரண் இணைந்திருந்தார். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மற்றும் பிரசாந்த் -வடிவேலு காம்பினேஷனில் இந்த படத்தின் காமெடி மிக சிறப்பான விமர்சனங்களை பெற்றது.