கோலாலம்பூர், ஜன.23-
பட்டதாரி ஆண்களுக்கும், பட்டதாரி பெண்களுக்கும் இடையில் நிலவி வரும் சம்பள வேறுபாடு இடைவெளி விவகாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் தற்போது, மனித வள அமைச்சுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சம்பள இடைவெளி விவகாரம் தனது அமைச்சு சம்பந்தப்பபட்டது இல்லையென்றாலும் இதில் பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இவ்விவகாரத்தை எழுப்ப வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் தாம் இருப்பதாக நன்ஸி சுக்ரி தெரிவித்தார்.