ஜோகூர்பாரு, ஜன.23-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர்பாரு மாநகரில் ஹுஆ முய் உணவகத்தில் இன்று தமது காலை சிற்றுண்டியை உட்கொண்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜோகூர் சுல்தானாக பதவியில் அமர்ந்த நிறைவு நாளையொட்டி தமது அரண்மனை பரிவாரங்களுடன் இணைந்து இனிய காலைப்பொழுது சிற்றுண்டியை அந்த உணவகத்தில் உட்கொண்டதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
ஜோகூர்பாரு மாநகரில் ஜாலான் துருசில் உள்ள அந்த உணவகத்தின் பிரபலமான மெனுக்களில் ஒன்றான சிக்கன் சோப் உணவை ருசித்து சாப்பிட்ட பின்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கிருந்து வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் உற்சாக மிகுதியில் காணப்பட்டனர். சிலர் மாமன்னருடன் செல்பி எடுத்துக்கொண்ட களிப்பில் திளைத்தனர்.