செப்பாங், ஜன.24-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 2 வருட காலமாக செயல்முடக்கம் கண்டுள்ள KLIA aerotrain ரயில் சேவை, இவ்வாண்டு இரண்டாவது காலாண்டில் செயல்படத் தொடங்கும் என்று Malaysia Airports holdings Berhad இன்று அறிவித்துள்ளது.
KLIA aerotrain சேவைக்கு புதிய ரயில்கள் பொறுத்தப்பட்டுள்ளன. ரயிலின் முழுமையான சோதனை முடிவடைந்ததும் அதன் செயல்பாடு தொடங்கும் என்று Malaysia Airports holdings Berhad –டின் நிர்வாக இயக்குனர் டத்தோ முகமட் இசானி கானி இன்று அறிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜுன் மாதம் KLIA aerotrain ரயில் சேவை முழு செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கோடிகாட்டினார்.
KLIA பிரதான விமான நிலையத்தின் விமான முனையத்தையும், புறப்பாட்டுப்பகுதியையும் இணைக்கும் 1998 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் இருந்த KLIA aerotrain ரயில் சேவையில் அடிக்கடி இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த ரயில் சேவை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக நிறுத்தப்பட்டது.