கோலாலம்பூர், ஜன.24-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட மாதுவை நோக்கி கடமையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், ஆபாச சைகையைக் காட்டியது தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்தின் அடுத்த உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.
அதேவேளையில் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அடையாளம் கூறப்பட்டுள்ள அந்த போலீஸ் அதிகாரி, இதற்கிடையில் வங்சா மாஜு போலீஸ் நிலையத்தில் வழக்கம் போல் தனது பணிகளைச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்கு பிறகு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ ருஸ்டி இதனை தெரிவித்தார்.