இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி: பெர்லி தான்- எம்.தீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்

நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி தானும் எம்.தீனாவும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவ்விருவரும் இப்பருவத்தில் முதலாவது வெற்றியை ஈட்டும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஜகார்த்தாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பெர்லி தான்-எம்.தீனா ஜப்பானிய ஜோடியை இரு செட்களில் தோற்கடித்தனர். கடந்த வாரம் இந்திய பொது பூப்பந்து போட்டியின் போதும் அவர்கள் அவ்விணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அப்போட்டியில் இறுதியாட்டத்திக்கு அவர்களால் முன்னேற முடியவில்லை. அதே சமயம் இம்மாதத் தொடக்கத்தில் மலேசிய பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றிலேயே பெர்லி தான்-எம்.தீனா வெளியேறினர். 

எனவே இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி அவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். நாளை அரையுறுதி ஆட்டத்தில் அவர்கள் தென் கொரியா அல்லது தைவான் இணையை எதிர்கொள்வர்.  

WATCH OUR LATEST NEWS