ஜோகூர்பாரு, ஜன.24-
ஜோகூர் பாருவில் புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய 60 வயது முதியவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,600 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்த முதியவருக்கு இந்த தண்டனையை மாஜிஸ்திரேட் ஹிடாயாதுல் ஷுஹாடா சம்சூதின் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வேண்டுமென்றே ஊழியரைத் தாக்கியது விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டது.
வாகன சோதனை தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளி, புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. குற்றவாளி மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.