கோலாலம்பூர், ஜன.24-
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ வெளியிட்ட புத்தகம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்திற்கு காவல் துறை அனுப்பியுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார். இந்த புத்தகம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில அரசு சாரா நிறுவனங்கள் காவல் நிலையத்தில் 182 புகார்கள் அளித்துள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.