நேர சுழற்சி முறையில் பணிபுரியும் தீயணைப்பு மீட்புத்துறை ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை

புத்ராஜெயா, ஜன.24-

மலேசிய தீயணைப்பு – மீட்புத் துறையில் 12 அல்லது 24 மணி நேர சுழற்சி முறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் முதல் ஆண்டுக்கு 26 நாட்கள் வருடாந்திர விடுமுறை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார் டத்தோ நோர் ஹிஷம் முகமட். பொதுச் சேவைத் துறையின் புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு நாள் கூடுதல் விடுமுறை பெற தகுதி பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

புதிய சுழற்சி முறையை செயல்படுத்துவது தொடர்பாக தொழிற்சங்கங்ளுடனும் அமைச்சுடனும் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த புதிய முறையின் மூலம் தீயணைப்புத் துறை ஊழியர்களின் வாராந்திர வேலை நேரம் 56 மணி நேரத்திலிருந்து 50 மணி நேரமாகக் குறையும். முன்பு தீயணைப்பு வீரர்களுக்கு வாராந்திர விடுமுறை என்பதே கிடையாது என 2025 ஆம் ஆண்டு அணிவகுப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

‘அதிகமாக வேலை செய்யுங்கள், குறைவாக ஓய்வெடுங்கள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் பணிச்சுமை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS