பெட்டலிங் ஜெயா, 25-
கடப்பிதழ்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதனைச் சமாளிக்கும் முயற்சியாக நாடு முழுமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிநுழைவு அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் திறக்கப்படவுள்ளன.
வழக்கமாக வேலை நாட்களில் செயல்படும், கடப்பிதழ்களை வெளியிடும் மொத்தம் 20 அலுவலகங்கள் அடுத்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த குடிநுழைவு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் திறந்திருக்கும். நகர்புற உருமாற்று மையங்களான UTC-யில் உள்ள குடிநுழைவு முகப்பிடங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.