ஈப்போ, ஜன.25-
ஈப்போவில் தற்போதைய ரயில் நிலையத்திற்கு பின்புறம் அதிநவீன போக்குவரத்து மையம் உருவாகவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
அந்தப் போக்குவரத்து மையத்திற்கு ஈப்போ சென்ரல் மையம் என்று பெயரிடப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈப்போ போக்குவரத்து சென்ரல் மையம் 626 கோடி ரிங்கிட் செலவில் ஈப்போவின் புதிய போக்குவரத்து மையமாக உருமாற்றம் காணவிருக்கிறது. இதன் நிர்மாணிப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
ஈப்போவின் பிரதான போக்குவரத்து மையமாக ஈப்போ சென்ரல் விளங்குவதுடன் வீடமைப்புகள், வர்த்தகங்கள், பொழுது போக்கு மையங்கள் என தேசியப் பொருளாதாரத்திற்கு பெரும் உந்தும் சக்தியாக ஈப்போ சென்ரல் விளங்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.