50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு, மக்களுக்கு அரசு வழங்கிய ஓர் உதவியாகும்

கோலாலம்பூர், ஜன.25-

வரும் சீனப்புத்தாண்டையொட்டி நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்க அரசாங்கம் முன்வந்து இருப்பது, மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய ஓர் உதவியாகும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இவ்வாண்டு முதல் பண்டிகளைக் காலங்களில் டோல் கட்டண இலவசம் இல்லை என்று அரசாங்கம் தீர்க்கமாக முடிவு எடுத்த போதிலும் நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கும் டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு, மக்களுக்கு வழங்கும் ஓர் உதவியாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

50 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படுவது மூலம் டோல் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை 20.08 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS