ஐவர் சுடப்பட்டதற்குக் காரணம் என்ன?

பெட்டாலிங் ஜெயா, ஜன.25-

பந்திங், தஞ்சோங் ரூ கடற்பகுதியில் அந்து அந்நிய ஆடவர்கள் சுடப்பட்டதற்குக் காரணம் என்ன என்பது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த அந்த ஐவரை கடல்சார் போலீசார் மடக்கி போது, அவர்களை பாராங்கினால் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

படகில் பயணம் செய்த அவர்கள், கடல்சார் போலீசாரின் இயந்திரப்படகை மோதியுள்ளனர். நான்கு முறை மோதப்பட்டப் பின்னர், கடல்சார் போலீஸ்காரர்களை பாராங்கினால் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

அப்போது தங்களை தற்காத்துக் கொள்வதற்கு கடல்சார் போலீசார் துப்பாக்கி பிரயோகம் நடத்திய போது ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் காயமுற்றார். காயமுற்ற நபர், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடல்சார் போலீசார், போலீசில் புகார் ஒன்றை செய்துள்ளதாக ஹுசேன் ஒமார் கான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS