இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 17 பேரைப் பலி கொண்டுள்ள விசித்திர நோய் குறித்து விசாரணை தொடக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரகளில் 13 பேர் சிறார்கள். கடந்தாண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே பந்தால் எனுமிடத்தில் அச்சம்பவம் அடையாளம் காணப்பட்டது. இவ்வாரத் தொடக்கத்தில் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்களுக்கு மூளைப் பகுதியிலும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள் உறவினர்களான மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, மரணமடைந்தவர்கள் தொற்றுநோய், வைரஸ் அல்லது பாக்டீரியாவால் இறக்கவில்லை. நச்சுத்தன்மை அம்சம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நச்சுத்தன்மை குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் தீங்கிழைக்கும் நோக்கில் ஏதும் செய்யப்பட்டதாக என்பது தொடர்பிலும் விசாரிக்கப்படுகிறது.