தனது மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்திய வங்காளதேசி கைது

அம்பாங், ஜன.25-

தனது மனைவியை மோப்பினாலும், Hair Dryer சாதனத்தினாலும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் வங்காளதேச ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்பாங், தாமான் டகாங்கில் உள்ள தனது வீட்டில் ஓர் இந்தோனேசியப் பெண்ணான தனது மனைவியை அந்த நபர் அடித்து துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனது இந்தோனேசிய மனைவி, மாற்று ஆடவன் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த அந்த வங்காளதேசி, அவரை அடித்து ரணப்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தாம் வேலைக்கு சென்றிருந்த வேளையில் தனது மனைவியின் காதலன் வீட்டிற்கு வந்து இருப்பதாகவும், இரவு 8 மணிக்கு தாம் வீடு திரும்பிய போது, சற்று நேரத்திற்கு முன்புதான் அந்த ஆடவர் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பதாக அந்த வங்காளதேசி தனது தற்காப்பு வாதத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் 46 வயதுடைய அந்த வங்காளதேசியை தாங்கள் கைது செய்துள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS