பதவி விலக வேண்டும் கோரிக்கைக்கு அடிபணிய முடியாது

கிள்ளான், ஜன.25-

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகும்படி பல்வேறு தரப்பினர் நெருக்குதல் அளித்த போதிலும் தாம் அவ்வாறு செய்ய இயலாது என்று அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பதவி விலகும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொள்வாரோயானால் தாம் பதவி துறக்கத் தயாராக இருப்பதாக முகமட் சாபு பதிலடி கொடுத்துள்ளார்.

அதேவேளையில் தாம் பதவி துறப்பதற்கான அவசியம் இருப்பதாக கருதவில்லை என்பதையும் முகமட் சாபு தெளிவுபடுத்தினார்.

இன்று கிள்ளானில் 2024 ஆம் ஆ ண்டுக்கான அமானா கட்சியின் தேசிய மாநாட்டை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் சாபு மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS