பெட்டாலிங் ஜெயா, ஜன.25-
2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பண்டார் சன்வேயில் நடைபெற்ற Pinkfish வரவேற்பு நிகழ்வில் நால்வர் மரணம் அடைந்தது தொடர்பில் போதைப்பொருள் கடத்தல்கார்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த அந்த நால்வர் போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாக இறந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாதரணையின் அடிப்படையில் அந்த மூவர் கைது செய்யப்ட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.