லஞ்ச ஊழல் எதிர்ப்புப் பேரணியில் கிட்டதட்ட 200 பேர் குழுமினர்

கோலாலம்பூர், ஜன.25-

லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுவதாக கூறி, கோலாலம்பூர் மாநகரில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த அதன் ஏற்பாட்டாளர்கள், மாலை 4 மணி வரையில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே திரண்டனர்.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியான பாடாங் மெர்போக்கில் இந்தப் பேரணி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதன் ஏற்பாட்டாளர்கள் சோகோ பேரங்காடியின் பிரதான பாதையிலிருந்து அணிவகுத்து, டத்தாரான் மெர்டேக்காவிற்கு வந்தனர்.

அனைவரும் தங்கள் கையில் பல்வேறு போஸ்டர்களையும் பதாகைகளையும் தாங்கிப்பிடித்தனர். இந்த பேரணிக்கு உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியதால் யாரும் தடுக்கப்படவில்லை. எனினும் போலீஸ் துறை நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வந்தது.

பேரணி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோர் இளையோர்களாக காணப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS